BSNL மற்ற டெலிகாம் நிறுவனங்களை விடவும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை அளிக்கிறது. நீங்கள் ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடி ஆகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்கள் எனில், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது ஆகும். BSNL நிறுவனத்தின் ஒரு ஆண்டு கால ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி நாம் தெரிந்துக் கொள்ளுவோம். இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் டேட்டா, குரல் அழைப்பு, SMS உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதேபோன்று ஜியோ நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி வருகிறது.
BSNL மற்றும் JIOன் ப்ரீபெய்ட் திட்டங்கள் நன்மைகள் குறித்து விரிவாக அறிந்துக்கொள்வோம். இதில் BSNLநிறுவனத்தின் ரூபாய்.1,570 திட்டமானது நாளொன்றுக்கு 2GP டேட்டா வழங்குகிறது. இத்திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அத்துடன் இந்த திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் கிடைக்கும். மேலும் தினமும் 100 SMS கிடைக்கும். அதே சமயத்தில் இத்திட்டத்தில் அதிவேக டேட்டா வரம்பு முடிந்தபின், வரம்பற்ற டேட்டாவை 40Kbps வேகத்தில் பயன்படுத்தலாம். எனினும் இந்த திட்டம் குஜராத்திலுள்ள ராஜ்கோட் சிட்டிசன் கூட்டுறவு வங்கி லிமிடெட் (RNSBL) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல் JIOன் ரூபாய்.2,879 திட்டத்தில் தினசரி 2GP டேட்டா கிடைக்கும். அதிவேக டேட்டா வரம்பு முடிந்தவுடன் 64Kbps வேகத்தில் வரம்பற்ற டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும் இத்திட்டம் வரம்பற்ற இலவச குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. அத்துடன் தினசரி 100 SMS இலவசமாக அனுப்பலாம். ஜியோ ஆப்ஸின் இலவசசந்தா உங்களுக்கு கிடைக்கும். ஆகவே இந்த 2 திட்டங்களை ஒப்பிட்டு பார்த்து எந்த திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கிறதோ அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.