Categories
டெக்னாலஜி

JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவை இன்று முதல்…. எங்கெல்லாம் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரிலையன்ஸ் jio இன்போகாம் லிமிடெட் இன்று JioTrue 5G நெட்வொர்க்கில் இயங்கும் Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கல்விநிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் வணிகமையங்கள் ஆகிய இடங்களில் இச்சேவை வழங்கப்படும். ராஜஸ்தானிலுள்ள நாத்து வாராவிலிருந்து JioTrue 5G வாயிலாக இயங்கக்கூடிய Wi-Fi இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. JIOவெல்கம் ஆஃபர் காலக்கட்டத்தில் பயனாளர்கள் இந்த புது Wi-Fi சேவையை இலவசமாகப் பெறுவர். மற்ற நெட்வொர்குகளைப் பயன்படுத்துவோரும் jio5ஜி இயங்கும் வைபையை மட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த இயலும். எனினும் ஜியோ-5G இயங்கக்கூடிய வைபை-ன் முழுச்சேவையையும் பயன்படுத்த விருப்பப்பட்டால், ஜியோவின் வாடிக்கையாளராக வேண்டும்.

JioTrue 5G Wi-Fiவுடன் இணையவதற்கு வாடிக்கையாளர் 5ஜி கைபேசியை வைத்திருக்கவேண்டிய அவசியம் கிடையாது என்பதும், 4G கைபேசியிலிருந்தும் இச்சேவையை இணைக்க முடியும் என்பதும் கூடுதலான தகவல் ஆகும். JioTrue 5G இயங்கும் சேவையுடன், ஜியோவின் True 5G சேவையும் நத்வாரா மற்றும் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியிலும் 5ஜி சேவையானது துவங்கப்பட்டது. பிறநகரங்களில் jio 5G சேவையினை கூடியவிரைவில் துவங்க மற்றும் ட்ரூ 5ஜி கைபேசிகளின் கிடைக்கும் தன்மையினை அதிகரிக்க ஜியோ நிறுவனத்தினுடைய குழுக்கள் 24 மணிநேரமும் உழைத்து வருகிறது.

நாட்டுமக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஆகாஷ் அம்பானி, “பகவான் ஸ்ரீநாத் ஜியின் அருளால், இன்று 5ஜி இயங்கும் வைஃபை சேவை நாத்வாராவில் ஜியோ ட்ரூ 5ஜி சேவையுடன் துவங்கப்படுகிறது. ஆகவே ஜியோவின் True 5G சேவை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் செயல்படவேண்டும் என்பதே எங்கள் முயற்சி ஆகும். ஸ்ரீநாத் ஜியின் ஆசியுடன், நாததுவாரா மற்றும் சென்னையும் இன்றுமுதல் ஜியோ ட்ரூ 5G நகரங்களாக மாறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், நாத்துவாராவில்தான் 5G சேவை முதன் முதலில் துவங்கப்பட்டுள்ளது என்றாலும், இச்சேவை இதுவரையிலும் வணிக ரீதியாக அறிமுகம் செய்யப்படவில்லை.

Categories

Tech |