அமெரிக்க நாட்டில் ஜனாதிபதியாக ஜோ பைடனின் செயல்பாடு குறித்து அந்நாட்டு மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டது .
அமெரிக்க நாட்டின் கடந்த ஜனவரி மாதம் 45- வது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றார். அப்போது அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இவர் பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தியதால் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமில்லாமல் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய திட்டங்களை ரத்து செய்தார்.
இந்நிலையில் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடனின் ன் செயல்பாடுகள் குறித்து நாடு தழுவிய அளவில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் 50 சதவீத மக்கள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் .அதேசமயம் 42 சதவீத மக்கள் ஜனாதிபதியாக ஜோ பைடனை ஏற்கவில்லை என்றும் ,மேலும் 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் .