செனட் சபையின் முன்னாள் பெண் ஊழியர் ஜோ பிடென் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்
அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடேன். வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குவது ஜோ பிடேன் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடேன் களம் இறங்கிய பொழுது அவருக்கு எதிராக ஏராளமான பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
ஜோ பிடேன் முன்னாள் உதவியாளரான எமி லேப்போஸ் நெவேடா மாகாண சட்டசபையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் உட்பட ஏழு பெண்கள் தங்களை அனுமதியின்றி தொட்டதாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாகவும் ஜோ பிடேனுக்கு எதிராக குற்றம் சுமத்தினர். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பிரச்சாரத்தை சிறிதும் பாதிக்கவில்லை. ஜனநாயக கட்சியினரிடம் அதிக ஆதரவு ஜோ பிடேனுக்கு இருப்பதனால் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் செனட் சபையின் முன்னாள் ஊழியரான தாரா ரீட் என்ற பெண் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோ பிடேனுக்கு உதவியாளராக பணிபுரிந்த பொழுது அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது குற்றம் சுமத்தியுள்ளார். இது அமெரிக்க தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஜோ பிடேனின் பிரச்சார குழு திட்டவட்டமாக இந்த குற்றத்தை மறுத்துள்ளது. அதே போன்று ஜோ பிடேனும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.