ஜோதிகாவின் கருத்தை ஏற்ற ஆசிரியை ஒருவர் திருப்பதி கோவிலுக்கு சேர்த்து வைத்த ரூபாய் 40 ஆயிரத்தை ஏழை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் நடித்த குஷி, ஜில்லுனு ஒரு காதல். தூள், காக்க காக்க போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்தது. திரையுலகில் நல்ல உயரத்தில் இருக்கும்பொழுதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா நாம் கோவிலுக்கு செய்யும் செலவு போன்று குழந்தைகளின் கல்விக்கும் செலவு செய்வோம் எனக் கூறியுள்ளார். இதனால் ஜோதிகா கோவில் குறித்து பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. சிலர் ஜோதிகாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஜோதிகாவின் கருத்தை கேட்டு ஆசிரியை ஒருவர் திருப்பதிகாக சேர்த்துவைத்த ரூபாய் 40 ஆயிரத்தை தனது பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.