அமெரிக்காவில் வேலை இழந்த வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் காலத்தை ஆறு மாதமாக நீட்டிக்க மனு அளித்துள்ளனர்.
அமெரிக்காவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3170 ஆகியுள்ளது. முழு அடைப்பு கடைப்பிடிக்கப்படும் என்பதால் மொத்தம் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 33 லட்சம் பேர் வேலை இழப்பு காலத்திற்கான உதவி கோரி அரசிடம் பதிவு செய்துள்ளனர்.
H1B விசாவில் அமெரிக்கா சென்றுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் வேலையில் இழந்த 60 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதியாகும்.இந்நிலையில் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு பணியாளர்கள் ஏராளமானோர் வேலையின்றி தங்கியிருக்கும் காலத்தை அறுபது நாட்களுக்கு பதிலாக 6 மாதங்களாக நீட்டிக்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.