Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில்…! ”2,00,00,000 பேர் வாழ்க்கை ஸ்வாகா” கதறப்போகும் அமெரிக்கர்கள் …!!

கொரோனா தொற்றின் காரணமாக அமெரிக்காவில் ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி மக்கள் வேலை இழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்ததோடு பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் தாக்கியுள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா தொற்றினால் அதிக அளவு பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. இதுவரை அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் பல்வேறு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் தொற்றினால் 2 கோடியே 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலையை இழந்துள்ளதாக ஊதிய நிறுவனத்தின் தகவல்கள் தெரிவித்து உள்ளது.  இதில் 500 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களை வைத்து இயங்கிவந்த சிறிய நிறுவனங்கள் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர போக்குவரத்து துறை சார்ந்த 34 லட்ச ஊழியர்களும், மருத்துவத் துறையை சார்ந்த 86 லட்சம் ஊழியர்களும், கட்டுமான நிறுவனங்களை சேர்ந்த 25 லட்ச ஊழியர்களும், 17 லட்சம் உற்பத்தியாளர்களும், 10 லட்சம் சுகாதாரத்துறை ஊழியர்களும் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். வேலைவாய்ப்பு குறித்து அமெரிக்காவின் தொழிலாளர் துறை அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிவிக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பே தனியார் தொழில் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் நாளை வெளிவரும் தகவலின்படி மார்ச் மாதம் 4.4 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது 16 சதவீதமாக அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என பொருளாதார வல்லுனர்கள் நம்புகின்றனர். இதுகுறித்து பகுப்பாய்வின் தலைமை பொருளாதார நிபுணர்  மார்க் சாண்டி கூறியதாவது “ஏப்ரல் மாதத்தை போன்று இந்த மாதமும் வேலை இழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு ஜூனில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் இந்த சூழலை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் ஆகும்” எனக் கூறியுள்ளார்

Categories

Tech |