பிரிட்டனில் பணியாளர் தட்டுப்பாட்டை தவிர்க்க சிறை கைதிகளை பயன்படுத்தலாம் என்று நாட்டின் நிதித்துறை செயலர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
பிரிட்டனில், மதுபான விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் பணியாற்றி வந்த ஐரோப்பியாவை சேர்ந்த இளைஞர்கள் பிரெக்சிட் மற்றும் ஊரடங்கு காரணமாக சொந்த நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் நாட்டில் பணியாளர் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மில்லியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் பிரிட்டன் நீதித்துறை செயலரான Dominic Raab, ஆயுள் தண்டனை முடிந்து சிறையிலிருந்து விடுதலையாகும் நபர்களை பணியில் சேர்க்கலாம். இல்லையெனில், சிறையில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளை தினசரி பணிக்கு அனுப்பி பணியிடங்களை நிறைவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் சமுதாயம் மற்றும் பொருளாதாரத்திற்கு நன்மை. மேலும் குற்றவாளிகள் வெளியே வந்த பின்பு மீண்டும் தாங்கள் கடந்த காலத்தில் செய்த குற்றசெயல்களில் ஈடுபடாமல், திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டில் அகதிகள் சுமார் 30 ஆயிரம் பேர், நாட்டில் தொடர்ந்து நாங்கள் வாழலாமா? என்ற கேள்வியுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே, அவர்களுக்கு பணி வழங்கலாம் என்று Dominic Raab-டம் கூறப்பட்டது. மேலும், லேபர் கட்சி புலம்பெயர்ந்தோரின் 1,00,000 விசாக்களை அனுப்பி லாரி ஓட்டுனர்கள் தட்டுப்பாட்டை நீக்க கேட்டிருந்தது. ஆனால், அவ்வாறு செய்தால் பிற நாட்டவர்களை அதிக காலத்திற்கு நம்பும் நிலை ஏற்பட்டுவிடும் என்று Dominic Raab கூறுகிறார்.
மேலும், அவர்களுக்கு குறைவான சம்பளமே அளிக்கப்படும். எனவே அதே போன்று நம் நாட்டு மக்களின் சம்பளமும் குறைந்து, அவர்களது வருமானமும் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாறு அகதிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று கூறும் Dominic Raab, செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து அகதியாக நாட்டிற்கு வந்தவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.