Categories
அரசியல் தேசிய செய்திகள்

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை : வெட்டியா பார்த்த வேலையை இனி காசுக்கு பாருங்க….. காங்கிரஸின் மாஸ்டர் பிளான்….!!

காங்கிரஸ் கட்சி 5 லட்சம் பேருக்கு வெப்வாரியர்ஸ் என்ற பெயர் மூலமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சமீபகாலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் அடுத்த சில மாதங்களில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதே சமயம் தொலைநோக்கு பார்வையுடன் கட்சியை வளர்க்க வேண்டியிருக்கிறது. கட்சிக்கு சரியான தலைமை, மாநிலங்களில் தலைமை, தொண்டர்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பாஜக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் சூழலில் காங்கிரசில் செயல்பாடுகளில் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு தற்போது பெரிய திட்டமொன்றை காங்கிரஸ் கட்சியை உருவாக்கி இருக்கிறது. அதாவது சமூக வலைதளங்களில் தங்கள் கட்சியின் அதிகப்படியான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில்” வாரியர்ஸ்” என்ற பெயர் மூலமாக ஆட்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களில் 50 ஆயிரம் பேர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேசிய, மாநில மற்றும் மாவட்ட அலுவலங்களில் வேலை செய்வார்கள்.

மீதி இருப்பவர்களை நெட்வொர்க்காக பல்வேறு இடங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், இலக்கு உள்ளிட்ட சமூகவலைதளம் வழியாக மக்களிடம் கொண்டு செல்லும் செயலில் ஈடுபடுவார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கும் சூழல் ஏற்பட்டதால், அப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் கட்சிகளை வழிநடத்தியது. இவ்வாறு செய்வதன் மூலம் காங்கிரஸின் செல்வாக்கு எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |