உக்ரைன் மீது போர் தொடுத்தால், ரஷ்யா கடும் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, போர் உண்டாவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியான நிலையை உண்டாக்குவதற்குரிய நடவடிக்கைகளை செய்தால், அதை நாங்கள் ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, உக்ரைனை தன் நேட்டோ கூட்டணியில் இணைக்க முயல்கிறது. அதனை, உக்ரைன் அரசும் விரும்புகிறது. ஆனால் ரஷ்யா, தன் பக்கத்து நாடான உக்ரைன், நேட்டோ கூட்டணியில் இணைந்தால், அது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிடும் என்று கருதுகிறது. உக்ரைனை, நேட்டோவில் இணைக்க வேண்டாம் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்ததை அமெரிக்கா ஏற்கவில்லை.
இதனைத்தொடர்ந்து, உக்ரைனின் எல்லை பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்திருக்கிறது. எனவே, ரஷ்யா மீது படையெடுக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்பில், அமெரிக்க அரசு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.