அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யாவை தண்டிப்பதற்காக புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து இரண்டாம் நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஒரு உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய நாட்டின் மீது புதிதாக பொருளாதார தடைகளை விதித்திருக்கிறார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, விளாடிமிர் புடின் ஆக்கிரமிப்பாளர்.
அவர் தற்போது படையெடுப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரும், அவராலும், அவரின் நாட்டாலும் இதற்கான கடும் விளைவுகளை தாங்க முடியுமா? ரஷ்ய நாட்டின் மீது நெடுங்காலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கடும் பொருளாதார தடைகளை அறிவிக்கிறோம்.
அமெரிக்க அரசு மட்டும் இதை செய்யவில்லை. எங்கள் கூட்டணி நாடுகளும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஏற்கனவே இரண்டு நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 மிகப்பெரிய வங்கிகள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருக்கும் அனைத்து சொத்துக்களும் முடக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஒரு ட்ரில்லியன் டாலர் சொத்துக்கள் கொண்ட ரஷ்யாவின் வங்கிகள் மீது பொருளாதார தடையை அறிவிக்கிறோம். நாட்டின் மிகப்பெரிய வங்கியை துண்டித்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்.
கொடுமைகளை எதிர்த்து அமெரிக்கா நிற்கிறது. இணைய வழி தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டால், அதற்கு பதிலடி தருவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவார் என்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று கூறியிருக்கிறார்.