Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்…. இந்திய நடுங்குகிறது…. ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை….!!!

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியா நடுங்குவதாக தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்தியா இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யவின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டையும், ஐநா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. மேலும் மென்மையான நிலைப்பாட்டையே ரஷ்யா மீது இந்தியா எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடனான நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது குவாட் அமைப்பில் அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் (அமெரிக்கா – இந்தியா – ஜப்பான் – ஆஸ்திரேலியா) உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்துவதில்  உள்ள செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜோ பைடன், “கூட்டமைப்பிலுள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதினின் ஆக்ரோஷித்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் உறுதியாக உள்ளது. இருப்பினும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விதிப்பது, புதினை எதிர்கொள்வது போன்ற விவகாரங்களில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது” என்று கூறியுள்ளார்

Categories

Tech |