Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”… மைக் ஆன்லையா இருந்துச்சி… வசமா மாட்டிய ஜோபைடன்… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணவீக்கம் தொடர்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது கடைசியாக ஒரு பத்திரிக்கையாளர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்டதால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்று கருதிய, ஜோ பைடன் அந்த பத்திரிக்கையாளரை, “அது மிகப்பெரிய சொத்து., அதிக பணவீக்கம், முட்டாள்” என்று ஒருமையில் திட்டியிருக்கிறார்.

அது மைக்கில் கேட்டுவிட்டது. இதைக் கேட்ட பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும், அதிபர் ஒருமையில் திட்டிய வீடியோவும் இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. எதிர்க்கட்சியினர் ஜோ பைடன் இது தொடர்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

Categories

Tech |