அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தன் வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பில் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் ஜோபைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, தான் செல்லமாக வளர்க்கும் நாய்களையும் கொண்டு சென்றுள்ளார். அதில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த சாம்ப் என்ற நாயை கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து வளர்த்து வருகிறார்.
மேலும் அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயை கடந்த 2018 ஆம் வருடத்தில் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாம்ப் இன்று உயிரிழந்துள்ளது. எனவே மிகுந்த வருத்தம் அடைந்த ஜோ பைடன், உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “13 வருட காலமாக எங்களது குடும்பத்தாருடன் நல்ல தோழனாக இருந்த சாம்பை இழந்து தவிக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.