Categories
உலக செய்திகள்

“சீக்கியர்கள், சமூகங்களை பலப்படுத்துகிறார்கள்!”.. குருநானக் ஜெயந்திக்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து..!!

அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் நேற்று கொண்டாடப்பட்ட குருநானக் ஜெயந்திக்கு சீக்கியர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.

குருபூரப் எனப்படும் குருநானக் ஜெயந்தியை சீக்கியர்கள் முக்கிய பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். நேற்று, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவியின் 552 -ஆம் பிறந்தநாள், உலகம் முழுக்க இருக்கும் சீக்கியர்களால் உற்சாகமாக கொண்டாடபட்டது. இந்நிலையில், நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீக்கிய மக்களுக்கு தன் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் குருநானக் கூறிய அமைதி, சேவை மற்றும் சமத்துவம் குறித்த தொலைநோக்கு கருத்துக்கள் தற்போதும்  முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மக்களுக்கான ஒழுக்கநெறிகள், சம உரிமைகள், பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அதிகாரம்  வழங்குதல், அனைத்து மதங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவது மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கு, ஆதரவளிக்கும் சேவைகள் ஆகியவற்றை குருநானக்கின் போதனைகள் வெளிப்படுத்துகிறது.
இவ்வாறான குருநானக்கின் கொள்கைகளை பின்பற்றி வாழ்வதால், சீக்கியர்கள் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் முழுவதிலும், இருக்கும் சமூகங்களை பலப்படுத்துகிறார்கள் என்று கூறியிருக்கிறது.

Categories

Tech |