அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். எனவே பிரதமர் மோடி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்கா சில காரணங்களால் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்கு ரஷ்யாவையும், சீனாவையும் அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட 108 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பூட்டான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு நாடுகளிடையே நிலவும் பிரச்சினை குறித்து இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.