அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு இடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் இரண்டு மணிநேரங்கள் பேசியதாக தகவல் வெளியானது.
இதில் இருவரும் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது, உக்ரைன் போர் போன்ற பல பிரச்சனைகளை ஆலோசனை செய்திருக்கிறார்கள். இந்நிலையில், இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்று முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.