Categories
உலக செய்திகள்

ஜி-20 உச்சி மாநாட்டில்… சீன அதிபரை சந்திக்கப்போகும் அதிபர் ஜோ பைடன்….!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி அன்று ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த மாநாட்டின் நடுவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீன நாடுகளிடையே தைவான் பிரச்சனையால் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஜோ பைடன் மூன்றாம் தடவையாக சீன அதிபரை சந்திக்க இருக்கிறார்.

Categories

Tech |