Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் போர்… அமெரிக்க அதிபருடன் பேசிய உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு, நிதியுதவி போன்றவை தொடர்பில் அமெரிக்க அதிபருடன் பேசியதாக தெரிவித்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து 11-வது நாளாக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதிபர், ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலை தடுப்பதற்காக தங்கள் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு கோரியிருந்தார்.

ஆனால், அதனை நேட்டோ நிராகரித்து விட்டது. எனவே, உக்ரைன் அதிபர் தங்கள் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து போராடுவார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனோடு தொலைபேசியில் பேசினேன். எங்களுக்கு தேவையான பாதுகாப்பு, நிதியுதவி, ஆயுத உதவி, ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் போன்றவை குறித்து பேசினோம் என்று  குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |