Categories
உலக செய்திகள்

சல்யூட் செய்த ஜோ பைடன்…. ஹாய் சொன்ன மோடி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார்.

இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று நடந்த ஜி 20 மாநாட்டில் அனைத்து தலைவர்களும் பாலியில் இருக்கும் மாங்குரோவ் காட்டிற்கு சென்றனர். அங்கு அனைத்து தலைவர்களும்  இருக்கைகளில் இருந்தபோது பிரதமர் மோடி மற்றொருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடியை நோக்கி புன்னகைத்து விட்டு சல்யூட் செய்தார். உடனே மோடி தன் கையை தூக்கி சகஜமாக ஹாய் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |