அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கவனித்து வந்தனர். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மருத்துவர் தெரிவித்ததாவது, ஜனாதிபதிக்கு நேற்று மாலையிலும் இன்று காலையிலும் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருக்கிறது. தற்போது அவருக்கு காய்ச்சலும், கொரோனாவிற்கான அறிகுறிகளும் முழுவதுமாக நீங்கி விட்டது என்று தெரிவித்திருக்கிறார்.