அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஜோ பைடன் அஞ்சலி செலுத்த உள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 5 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவால் இதுவரை 28,765,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 511,133 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் இன்று கொரோனாவால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்த உள்ளனர். இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை விட தற்போது கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.