Categories
உலக செய்திகள்

“ஏற்கனவே புடினுக்கு விளக்கியாச்சு!”…. உக்ரைன் மீது படையெடுத்தா அவ்ளோ தா…. ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றினால் மிகப்பெரிய விலை தர நேரும் என்று பகிரங்கமாக எச்சரித்திருக்கிறார்.

சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே மோதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, சுமார் ஒரு லட்சம் வீரர்களை உக்ரைன் எல்லை பகுதியில் குவித்திருக்கிறது. இதனால் இரண்டு நாடுகளுக்குமிடையே போர் ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது.

இந்த பிரச்சினையில் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா, உக்ரேனை  கைப்பற்றினால் மிகப்பெரிய விலை தர நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் என் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டேன்.

ரஷ்ய நாட்டின் படைகள் உக்ரைன் எல்லைப் பகுதியை தாண்டி சென்றால், அது படையெடுப்பாகத்தான் கருதப்படும். அவ்வாறு செய்தால் ரஷ்யா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |