Categories
உலக செய்திகள்

திடீர் பயணமாக…. உக்ரைன் சென்ற ஜோ பைடன் மனைவி…. அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியுடன் சந்திப்பு…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனைவியான ஜில் பைடன், உக்ரைன் நாட்டிற்கு சென்று அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஏறக்குறைய 75 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரேன் நாட்டிற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன், திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அங்கு, உஹோரோடா என்னும் நகரில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியின் மனைவி  ஒலேனே ஜெலன்ஸ்கியை சந்தித்து, சிறிது நேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பத்திரிகையாளர்களிடம் இருவரும் தெரிவித்ததாவது, இந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதை உக்ரைன் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது. இது கொடுமையானது. ஐநா உறுப்பினர்கள் உக்ரைனியர்களுக்கு  ஆதரவுடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |