அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரசின் முக்கிய பொறுப்பில் ஆட்களை நியமனம் செய்து வருகின்றனர், இதில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த தூதரக அதிகாரியான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத் துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலாளராக இவரை நியமித்துள்ளனர்.
உளவுத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர் 2014 முதல் 2015 வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார், இவர் ட்ரம்பின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.