அமெரிக்க நாட்டில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றி விட்டது.
அமெரிக்க நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளுக்கு எட்டாம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமாக பிரதிநிதி சபையில் 435 இடங்கள், செனட் சபையில் நூறு இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான, முடிவுகள் வெளியானது.
இதில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் கடுமையான போட்டி இருந்தது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியானது சுமார் 711 இடங்களில் வென்று பெரும்பான்மையை பெறவிருந்தது. ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது, 64 இடங்களில் வெற்றி பெற்றது.
50 இடங்களை பெற்று செனட் சபையை ஜோ பைடனின் ஜனநாயக கட்சி கைப்பற்றி விட்டது. குடியரசு கட்சியும் விடாமல் சுமார் 48 இடங்களை வென்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த சமயத்தில் நெவாடாவில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி, செனட் சபையை கைப்பற்றி விட்டது.