Categories
உலக செய்திகள்

பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகள்… மீண்டும் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும் ஜில் பைடன்…!!

அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவின் 46வது  ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவரது மனைவியான ஜில் பைடன் குடும்பத்தினரை பிரிந்து வாழும் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது ஜில் பைடன் எடுத்துவரும் முயற்சியினால் ஒன்று சேர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது , “குடியேற்ற கொள்கையினால் பிரிக்கப்பட்ட குடும்பங்களையும் குழந்தைகளையும் ஒன்றிணைக்க  ஒரு குழுவை தொடங்கலாம் என்று ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இந்த திட்டத்தில் பங்கேற்க அவரது மனைவி ஜில் பைடன் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார் “என்று கூறியுள்ளார். இதுவரை பெற்றோருடன் மீண்டும்  ஒன்று சேர்க்க 2500 க்கும் மேற்பட்ட  அகதி குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |