அமெரிக்காவில் ஜோ பைடனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் முக்கிய பொருப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனத்தின் இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சோனாலி நிஜவன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே அமைப்பில் வெளியுறவு விவரங்கள் பிரிவில் புதிய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய பிரஸ்டன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் தேர்தலில் இரண்டு முறை போட்டியிட்டு குல்கர்னி தோல்வியடைந்துள்ளார். குல்கர்னி தைவான்,ரஷ்யா,ஈராக்,இஸ்ரேல் மற்றும் ஜமைக்கா நாடுகளில் சேவை புரிந்திருக்கிறார்.மேலும் பொது ராஜதந்திரம், பொது விவகாரங்கள் மற்றும் சர்வதேச தகவல் திட்டங்களிலும் பணிபுரிந்துள்ளார்.
ஆகையால் அவரைப் பற்றி அறிந்த ஜோ பைடன் தலைமைப் பண்பு காரணமாக அவரை இப்பதவியில் நியமித்துள்ளார். எனவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஜோ பைடன் முக்கியத்துவம் அளித்து வருவதால் இந்திய-அமெரிக்க உறவில் புதிய பிணைப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.