Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டி.!!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுவார் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்ட பேரவை தொகுதிக்கு  வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி, காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் அக்கட்சியின்  தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி ஆலோசனைக்கு பின் நேற்று இரவு காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக், நாங்குநேரி தொகுதியில்  ரூபி மனோகரன் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

Image result for John Kumar

இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார் என்று அதிகார்வப்பூர்வமாக காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் நெல்லித் தோப்பு தொகுதியில்  வெற்றி பெற்றவர் ஜான்குமார். முதல்வர் நாராயணசாமிக்காக நெல்லித் தோப்பு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |