Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உழவுத் தொழில் செய்பவர் தாழ்ந்தவரா….? நாம் உயர்வைக் கொண்டு சேர்ப்போம்…. ஜான்பாண்டியனின் பொங்கல் வாழ்த்து….!!

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் பொங்கலுக்கு ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:-தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த தை திருநாளில் உழவுத்தொழில் செய்து வாழ்பவரை தாழ்ந்தவர் என்று சொல்லும் நிலை மாறி அவர்களுடைய உயர்வுக்கான வழி பிறக்க வேண்டும்.

பயிர் செய்து அதனை அறுவடை செய்யும்போது பெரும் விளைச்சல் கண்டவுடன் மனதில் பொங்கி வரும் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், அதற்கு காரணமாய் விளங்கும் இயற்கையை பொங்கலிட்டு வழிபட்டு நன்றி தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள். இந்த நன்னாளில் தமிழ்ச் சமூகம், உழவு தொழில் செய்வோருக்கு உயர்வை கொண்டு சேர்ப்போம் என உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி அனைத்து தமிழ் சமூக உறவுகளுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |