மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை பெறுவது தொடர்பாக தடுப்பூசி நிலைக்குழு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் இரண்டு தவணை தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி கிடைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிலும் ஜான்சன் & ஜான்சன் தயாரிக்கும் தடுப்பூசியை பெற்றவர்கள் போதிய தடுப்பூசி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையும் அதே நிறுவனத்தை சார்ந்த MRNA தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற உலக நாடுகளை போல ஜெர்மனியும் அதன் மக்களுக்கு டாப் அப் அல்லது பூஸ்டர் என்று அழைக்கப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசியை வழங்குகிறது.
பெரும்பாலும் இந்த தடுப்பூசியானது காப்பகத்தில் உள்ளவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தற்பொழுது இவர்கள் மட்டுமின்றி பூஸ்டர் தடுப்பூசி பெறுவதில் மற்றொரு குழுவாக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை பெற்றவர்களும் கவனிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து ஜெர்மனியின் நிலையான தடுப்பூசி ஆணையம் கூறியதில் “எந்த MRNA தடுப்பூசியை தடுப்பூசியை பெற்றுக் கொண்டாலும் அவர்கள் இரண்டாவது தவணையும் அதனையே செலுத்த வேண்டும்.
குறிப்பாக MRNA தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஆறு மாதங்கள் கழித்த பின்னரே பூஸ்டர் தடுப்பூசியை பெறவேண்டும். இருப்பினும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் ஐந்து மாதங்களிலேயே மூன்றாவது தவணையான பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மக்கள் தங்கள் மருத்துவரின் பரிந்துரைக்கு பின்னர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை பெற்றவர்கள் மூன்றாவது தவணையும் அதே தடுப்பூசியை பெற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.