ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதாக ராஜஸ்தானில் நடைபெற்ற ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிப்பு பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ஃபார்மால்டிஹைட் வேதிப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை குறித்து தெரிவித்த ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜா ராம் ஷர்மா , ஜான்சன் அண்ட் ஜான்சன் நோ டியர்ஸ் பேபி ஷாம்புவினை சோதனைக்குட்படுத்தியதில் அதிக அளவில் நச்சு வேதிப்பொருளான ஃபார்மால்டிஹைட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதை பயன்படுத்தினால் புற்றுநோய் உண்டாகும். ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் எவ்வித நச்சும் கலக்கப்படவில்லை என கூறி வருகிறது. மேலும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட பொருட்கள் கூடுதல் ஆய்வுக்கு மத்திய மருந்துகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.