Categories
உலக செய்திகள்

டெல்டா வைரஸை எதிர்க்கும் திறன் கொண்டது.. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அனுமதிப்பது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவிலுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியானது, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி ஒரு டோஸ் மட்டுமே கொண்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தீவிரமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக இத்தடுப்பூசி நிலைத்த செயல்திறன் கொண்டிருப்பது, நிரூபிக்கப்பட்டிருப்பதாக ஜான்சன் ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் 8 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் நீடிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |