Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் சேருங்கள்…. சொல்லிட்டு போங்க….. காங்கிரஸ் தலைவர் கருத்து..!!

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜக செல்ல வேண்டுமென்றால் தாராளமாக செல்லுங்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை பாராட்டினர். இதனால கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இவர்கள் இருவரின் கருத்து பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான  வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது , காங்கிரசிலிருந்து விலக யார் விரும்பினாலும் தாராளமாக விலகிக் கொள்ளலாம் என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கூறும் போது , ஜெய்ராம் ரமேஷ், சசிதரூர் பிரதமர் மோடியை புகழ்ந்தது மோசமான ரசனையாகும். இருவரும் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள முயற்சிக்கின்றார்கள். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சேவை செய்யமாட்டார்கள் . அமைச்சராக இருந்து அதிகாரத்தை அனுபவித்து விட்டு எதிர்க்கட்சியானதும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றார்கள். இவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரத்தில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே செல்ல விரும்பினால் நேரடியாக சொல்லிவிட்டு செல்லுங்கள்.  கட்சிக்குள் இருந்து கொண்டே  கட்சியின் சித்தாந்தத்தை நாசப்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |