Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவுடன் சேர்ந்து உதவுவோம்…. சீனா வெளியிட்ட அறிவிப்பு…!!!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு உதவி செய்ய இந்தியாவுடன் சேர்ந்து செயல்படவுள்ளதாக சீனா கூறுகிறது.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களையும் உணவு பொருட்களையும் கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உலக நாடுகளிடம் நிதியுதவி கோரியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை மீட்டமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே அவர் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் வாங்க இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் தங்களுக்கு உதவவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இலங்கை நாட்டிற்காக இந்தியா சிறந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உதவி செய்துகொண்டிருக்கிறது என்று சீன அரசு பாராட்டியிருக்கிறது. மேலும், இந்தியாவுடன் சேர்ந்து இலங்கைக்கு உதவ தயாராகவுள்ளோம் என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |