Categories
தேசிய செய்திகள்

நாளை பாஜக வில் இணைகிறார்…. நம்ம லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான தகவல்…!!

லேடி சூப்பர் ஸ்டார் நாளை அமித்ஷா முன்னிலையில் பாஜக வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயசாந்தி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் “லேடி சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார்.

மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன இவர் நாளை பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது ஏற்கனவே பாஜகவில் இருந்து அவர் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார் காங்கிரஸ் கட்சியில் அதிலிருந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் நாளை உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கட்சியில் இணைவார் என்று தெரிகிறது.

Categories

Tech |