Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யாக்கர் கிங்”… கௌரவித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்… புகழின் உச்சியில் நடராஜன்..!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் நடராஜனை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கௌரவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த நடராஜனை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கௌரவித்துள்ளது. நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல் டி20 போட்டியிலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். அறிமுகமான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தது குறித்து யூடியூபில் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

 

அதில் “யார்க்கர் கிங் நடராஜன் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடினார்” என்ற வாசகமும் அடங்கி இருந்தது. இதுவரை இந்திய அணியில் ரசிகர்கள் மட்டுமே யார்க்கர் கிங் என்று அழைத்து வந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும், இந்த வாசகத்தை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் போட்டியிலேயே உலக அரங்கில் யார்க்கர் கிங் என்ற பட்டத்தை பெற்று தனது திறமையை நிரூபித்து விட்டார் நடராஜன் என பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்றும், மூன்றாவது போட்டி 8 ம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |