அமெரிக்கா தயாரித்த ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியில் பாதிப்பு ஏற்படுவதாக அமெரிக்கா தடை விதித்த நிலையில் தற்போது நோய் கட்டுப்பாடு தடுப்பு முகாம் அதனை பரிந்துரை செய்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஓராண்டு காலமாக நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் பல்வேறு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி தீவிரமாக பட்டு வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
அந்த தடுப்பூசிகள் அனைத்தும் 2 தவணை முறையில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அதாவது ஒரு டோஸ் செலுத்திய 4 வாரங்களுக்குப் பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போது அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் என்ற நிறுவனம் ஒரே தவணையில் செலுத்தக்கூடிய தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இத்தடுப்பூசியை இந்தியாவிற்கு வழங்குவதற்கும் அனுமதி கேட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை செலுத்திக்கொண்டு பலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனம் சிறிது காலத்திற்கு தடை விதித்தது.
அதன்பிறகு தடுப்பூசியை ஆராய்ச்சி செய்த போது இந்த தடுப்பூசியால் ஏற்படும் அபாயத்தை விட கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான பலன்கள் அதிகமாக காணப்படுவதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகாம் கூறியுள்ளது. ஆகவே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.