சுவிட்சர்லாந்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸை எதிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் ஏற்கனவே மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற நிறுவங்களின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கென்று தனி சிறப்பம்சங்கள் இருக்கின்றது. அது என்னவென்றால்,
- சுவிட்சர்லாந்தில் பயன்பாட்டில் இருக்கும் மற்ற இரண்டு நிறுவனங்களை விட இந்நிறுவனத்தின் தடுப்பூசி விலை குறைவுதான்.
- இந்த தடுப்பூசியை பிரீசரில் வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
- இதனை 2-டோஸாக போடாமல் ஒரு டோஸ் போட்டால் மட்டுமே போதுமானது தான்.
இரண்டு நிறுவனத்தின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் அங்கு தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கையெழுத்திட்டாலும் தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரிக்குமா? என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது.