காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான ஜோதிமணி நடிகர் சித்தார்த், சாய்னா நேவால் குறித்து பாலியல் ரீதியாக விமர்சித்ததை எதிர்த்திருக்கிறார்.
சாய்னா நேவால் பஞ்சாப்பில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது தொடர்பில் கருத்து பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த், குறிப்பிட்டிருந்த வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஜோதிமணி, “நம் அனைவரையும் போன்று சாய்னா நேவாலுக்கும் தன் அரசியல் கருத்துக்களை கூறும் உரிமை உள்ளது.
நம் எல்லோரையும் போல சாய்னா நெய்வாலுக்கும் தனது அரசியல் கருத்துக்களை சொல்லும் உரிமை இருக்கிறது.அவருடைய கருத்தோடு முரண்பட்டால் நாகரிகமான முறையில் பதில் கருத்து சொல்லலாம்.விமர்சிக்கலாம்.அவர் பெண் என்பதாலேயே பாலியல் ரீதியான தாக்குதலை தொடுப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
— Jothimani (@jothims) January 11, 2022
அவரின் கருத்தில், நமக்கு முரண்பாடு இருந்தால் நாகரிகமான முறையில் பதில் கருத்து கூறலாம். விமர்சனம் செய்யலாம். ஆனால் அவர் பெண் என்பதால் பாலியல் ரீதியாக தாக்குவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1480962679032324097