அமெரிக்க நாட்டில் புலனாய்வு பிரிவினுடைய மூத்த பத்திரிக்கையாளர் தன் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் லாஸ்ட் வேகாஸ் பகுதியைச் சேர்ந்த ஜெப் ஜெர்மன் என்ற புலனாய்வு பத்திரிகையாளர் அவரின் குடியிருப்பில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறார். அவரின், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், அதனை பார்த்து, உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இவருக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் ஜெர்மனி அந்த நபர் கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த வருடத்தில் பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.