Categories
தேசிய செய்திகள்

“நிலவை நோக்கிய பயணம்” 3வது அடுக்கில் இணைந்தது சந்திராயன்-2..!!

சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையில் மூன்றாவது அடுக்கில் வெற்றிகரமாக இணைந்தது.

கடந்த 20ஆம் தேதி நிலவின் வட்டப் பாதைக்குள் சந்திராயன்-2 செயற்கைக்கோள் நுழைந்து நிலவை சுற்றி வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு 21_ஆம் தேதி சுமார் 2,650 கிலோ மீட்டரில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து சந்திராயன்-2 அனுப்பியது.இந்நிலையில் 4 ,375 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மற்றொரு புகைப்படத்தை சந்திராயன் 2 அனுப்பியுள்ளது.

Image result for chandirayan 2

அதாவது பூமிக்கும் நிலவுக்கும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், தற்போது  சந்திராயன்-2 விண்கலம் நிலவு வட்டப்பாதையின் மூன்றாவது அடுக்கில் இணைந்தது. அடுத்த 11 நாளில் சந்திராயன்-2 நிலவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |