Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்…. முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில்  பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும், ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு பேசுவதும் திமுகவிற்கு கைவந்த கலை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரிகான 45வது கவுன்சில்  கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்கு  கொண்டு வருவது குறித்து தீர்மானம் செய்யப்பட்டது.

ஆனால் அதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்  அந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.அதற்கு தமிழக  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.இதையடுத்து பொருட்கள் மற்றும் சேவை வரி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு வரவேண்டும் என்று எடப்பாடி ஆட்சியில் இருந்தபோது வலியுறுத்தியது. அது ஆட்சியைப் பிடிப்பதற்காக தான் என்று மக்களிடையே ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே முதலமைச்சர் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த நடவடிக்கை பொது மக்களின் சுமையை குறைப்பதோடு மட்டுமல்லாமல் பிரச்சாரத்தின் போது திமுக கூறிய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .5 குறைப்பு டீசல் விலை ரூ.3  குறைப்பு என்ற வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படும் வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |