தலைநகர் டெல்லியில் சட்டத்துறையும் , காவல்துறையும் மோதிக்கொண்டு போராட்டம் நடைபெறும் சம்பவம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது.
நவம்பர் 2_ஆம் தேதி சனிக்கிழமை டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரும் , காவல்துறையினரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதனையடுத்து போலீஸ் தடியடி நடத்தியதில் காவல்துறை மற்றும் வழக்கறிஞ்சர் மோதல் வன்முறையாக வெடித்தது.
இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 8-க்கும் மேற்பட்ட வழக்கறிஞ்சர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பின்னர் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞ்சர்கள் அங்கிருந்த ஏராளமான காவல்துறை வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினார். இதனால் தலைநகர் டெல்லி பரபரப்புக்கு பஞ்சமின்றி இருந்தது.
இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்நிலையத்தை வழக்கறிஞ்சர்கள் முற்றுகையிட்டதோடு , போலீஸாரையும் தாக்கினார். ஆங்காங்கே போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் நடந்தாலும் கூட போலீஸ்ஷை தாக்கிய வழக்கறிஞ்சர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞ்சர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
https://twitter.com/i_theindian/status/1191650034128867329
இதையடுத்து டில்லி உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் தாக்குதல் நடத்திய வழக்கறிஞ்சர் மீது நடவடிக்கை இல்லை , எங்கள் மீது மட்டும் நடவடிக்கையா ? என்று இன்று டெல்லி காவல்துறை தலைமையலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் இப்படி எங்களை தாக்கினால் நாங்கள் எப்படி பணி செய்ய முடியும் . எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழக்க வேண்டுமென்று வழக்கறிஞ்சர்களுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.
Shocking! 😲😲
The two who are supposed to abide by the law and maintain the law are making the mockery of the law.
.
. @DelhiPolice
Are you sleeping???#LawyersVsDelhiPolice
#DelhiPoliceVSLawyers pic.twitter.com/2YYPNNM7hY— 🇮🇳 રાજ 🇮🇳 (@Raj_864) November 4, 2019
அதோடு காவலர்கள் தாக்கப்பட்ட விஷயத்தில் வழக்கறிஞ்சர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.டெல்லி போலீஸ் கமிஷனரான அமுல்யா பட்நாயக் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் , போலீசாரை தாக்கிய வழக்கறிஞ்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் வருவதால் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கிணங்க டெல்லி கமிஷனரான அமுல்யா பட்நாயக் போராட்டத்தில் ஈடுபட்ட காவல்துறையிடம் பேசினார் .