கோவையில் பிராணக் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய மோகன்ராஜ் ராமசாமி என்பவர் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாக இருந்துள்ளார். எலக்ட்ரிக் கார் உற்பத்திக்குப் பெயர் போன நிறுவனம் எலன் மஸ்கின் டெஸ்லா. இந்த நிறுவனத்தில் பொறியாளராக கோவையைச் சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி பணியாற்றி வந்தார். பின்னர் அங்கிருந்து விலகி கோவை வந்த மோகன்ராஜ் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீவாரி மோட்டார் நிறுவனம் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். எலக்ட்ரிக் பைக் தயாரிப்பதுதான் மோகன்ராஜ் ராமசாமியின் முக்கிய நோக்கமாகவும்.
டெஸ்லா நிறுவனத்தில் பணியாற்றிய போதும் அவருக்குக் கிடைத்த அனுபவத்தை கொண்டு ராமசாமியின் கனவில் உதித்தது தான் பிரானா என்ற எலக்ட்ரிக் பைக். கடந்த 2015ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மோகன்ராஜ் ராமசாமியின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. கனவு நிறைவேறி முதல் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தொடங்கி வைத்தார். எலக்ட்ரிக் பைக் என்பதால் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசையும் ஏற்படுத்தாது. மணிக்கு அதிகபட்சமாக 123 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும், நான்கு வினாடிகள் 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
பெட்ரோல் வாகனத்தை விட அதிக இழுவை திறன் கொண்டது. இந்த வாகனத்தில் கிளட்ச், கியர் இல்லை என்பதால் பராமரிப்பு செலவு குறைவானது. இன்ஜினில் இருந்து தானாகவே பிரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சறுக்கிக் கீழே விழும் வாய்ப்பு மிகக் குறைவு. பிரானா பைக்கில் எல் எஸ் பி
ரக பேக்டரி பயன்படுத்தப்படுகிறது.2000 முறை இதை சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும். தொடர்ந்து மதுரை, திருப்பூர், பாண்டிச்சேரி, கோழிக்கோடு மற்றும் திண்டுக்கல், பெங்களூரு நகரங்களில் பிரானா அறிமுகமாக உள்ளது.
வெளி மாநிலங்களிலும் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இந்த பைக்கின் பாகங்கள் 70% உள்நாட்டு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. எலைட் மற்றும் கிராண்ட் என்ற இரு வகைகளில் இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. எலைட் ரக வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர், கிராண்ட் ரக வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஊட்டியில் 26 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்ய முடியும். இந்த பைக்கின் விலை 2 லட்சம் முதல் இரண்டேகால் லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.