பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வித்தியாசமான கோஷங்களை எழுப்பி அனைவரின் கவனத்தையும் தன் மீது திருப்பியவர் ஜூலி. இதன் காரணமாகத்தான் ஜூலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து வருகிறார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினார்.
இந்நிலையில் நடிகை ஜூலி நடிகர் ரியாஸ் கான் மற்றும் நடிகை உமா ரியாஸ் மகனை காதலிப்பதாக சமீப காலமாகவே கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஜூலி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷாரிக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜூலி மற்றும் ஷாரிக் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறி வருகிறார்கள்.
View this post on Instagram