தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கொடுத்துள்ள பெட்டிஷனில் இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயர்வுக்கு மட்டும் அனுமதி கேட்காமல், ஒவ்வொரு வருடமும் இன்புலேஷன் எவ்வளவு இருக்கோ அல்லது கட்டணத்தில் 6%, இதில் எது அதிகமா இருக்கின்றதோ, அந்த அளவுக்கு மின்சார கட்டணத்தை கூட்ட அனுமதி வேண்டும் என்று டி.என்.டி.ஆர்சியில் ( தமிழ்நாடு மின் தொடர்பு கழகம்) கேட்டிருந்தார்கள்.
அதன்படி இனி எல்லா வீட்டு உபயோகம், கடைகள், தொழில் துறை, மருத்துவம், எல்லா லெவல்லையும் ஒவ்வொரு கட்டண அளவீடு இருக்கு. இந்த கட்டணத்தை கூட்டுவதற்கு மின்பகிர்மான கழகத்திற்கு அப்ரூவல் கொடுத்து இருக்கிறார்கள். 2022 – 20223க்கு அப்புறம் ஒவ்வொரு மாதமும் ஜூலை 1ஆம் தேதி இன்ஃப்ளேஷன் ரேட் எவ்வளவு இருக்கின்றதோ அது அல்லது 6% மின் கட்டணம் ( ரெண்டுல எது அதிகமாக இருக்கோ) அதன்படி மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
எதனால் மின்கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்டு இருக்கின்றார்கள் என்றால், இவர்களுடைய கடன் சுமை 1.45 லட்சம் கோடி இருக்கு. இதனை திருப்பி தருவதற்கு உண்டான சாத்தியக்கூறு இல்லை. இப்போதைக்கு எங்கேயுமே இவர்களால் கடனும் வாங்க முடியவில்லை. எனவே 6% எங்களுக்கு கூட்டினால் மட்டும்தான் எங்களால் கடனை திருப்பி செலுத்த முடியும் என்று சொல்லி கேட்டததற்காக இவர்களுக்கு மின்கட்டண உயர்வுக்கு அப்ரூவல் கொடுத்திருக்கிறார்கள் . 8 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் இனிமேல் வருடத்திற்கு உயர்த்தப்படும் என்பதால் பொதுமக்களுக்கு ஷாக் அடித்துள்ளதாக வேதனைப்படுகின்றனர்.