Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 21…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 21
கிரிகோரியன் ஆண்டு : 202_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 203_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 163 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள் :

 

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

230 – முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.

365 – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

905 – இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.[1]

1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.

1718 – உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.

1774 – உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.

1798 – நெப்போலியனின் படைகள் [[உதுமானியப் பேரரசு|உதுமானிய[[-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன.

1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர்.

1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்:  அமெரிக்கப்  படைகள்  குவாமில்  தரையிறங்கி  சப்பானியப்  படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகத்து 10 இல் இது நிறைவடைந்தது).

1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள்  பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் ஆவார்.

1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார்.

1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.

1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.

1970 – 11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது.

1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர்.

1976 – அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.

1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.

1983 – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது.

1995 – சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது.

2001 – சப்பான், ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

2008 – ராம் பரன் யாதவ் நேப்பாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.

இன்றைய தின பிறப்புகள் :

1515 – பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)

1620 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682)

1654 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672)

1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)

1911 – மார்ஷல் மெக்லுன், கனடிய மெய்யியலாளர் (இ. 1980)

1911 – எஃப். எக்ஸ். சி. நடராசா, ஈழத்து எழுத்தாளர்

1917 – க. சண்முகம்பிள்ளை, ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)

1929 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (இ. 1973)

1930 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (இ. 2002)

1934 – சந்து போர்டே, இந்தியத் துடுப்பாளர்

1940 – சங்கர்சிங் வகேலா, இந்திய, குஜராத் அரசியல்வாதி

1944 – ஜோன் அட்டா மில்ஸ், கானாவின் 3வது அரசுத்தலைவர் (இ. 2012)

1947 – சேட்டன் சவ்ஹான், இந்தியத் துடுப்பாளர்

1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக நடிகர் (இ. 2014)

1957 – இசுடீவன் இலோவென், சுவீடனின் 33வது பிரதமர்

1960 – அமர் சிங் சம்கிலா, இந்தியப் பாடகர் (இ. 1988)

1971 – ஆர். கண்ணன், இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்

1975 – ரவீந்திர புஸ்பகுமார், இலங்கைத் துடுப்பாளர்

1978 – ஜஸ்டின் பர்தா, அமெரிக்க நடிகர்

1978 – ஜோஷ் ஹர்த்நேட், அமெரிக்க நடிகர்

1978 – டாமியன் மார்லி, யமெய்க்கா பாடகர்

1984 – பரத், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்  :

1796 – ராபர்ட் பர்ன்ஸ், இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1759)

1889 – வேதநாயகம் பிள்ளை, தமிழக எழுத்தாளர் (பி. 1826)

1899 – இராபர்ட் கிரீன் இங்கர்சால், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1833)

1920 – பியம்மேத்தா வில்சன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1864)

1967 – ஆல்பர்ட் லுத்துலி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1898)

1984 – டி. வி. இராமசுப்பையர், தமிழக ஊடகவியலாளர், தினமலர் நிறுவனர் (பி. 1908)

1998 – அலன் ஷெப்பர்ட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1923)

2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1927)

2006 – எல். எம். நர்துக்கி, இத்தாலிய-அமொிக்க இயற்பியலாளா் (பி. 1942)

2009 – கங்குபாய், இந்துத்தானிப் பாடகி (பி. 1913)

இன்றைய தின சிறப்புநாள் :

விடுதலை நாள் (குவாம், 1944)

இன சமத்துவ நாள் (சிங்கப்பூர்)

Categories

Tech |