ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் செம மாஸ் யாரும் மிஸ்பண்ணாதிங்க…!!
ஸ்பென்சர், மார்தா, பிரிட்ஜ், பெதானி ஆகியோர் முந்தைய ஜுமான்ஜியை விளையாடிவிட்டு இனிமேல் இந்த விளையாட்டில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று அதை உடைத்துவிட்டு அவரவர் வழியில் சென்று விடுகின்றனர். காதல் தோல்வியில் தவிக்கும் ஸ்பென்சர், மீண்டும் இந்த ஜுமான்ஜி உலகத்திற்கு போகவேண்டுமென்று உடைந்த வீடியோ கேமை சரி செய்து ஜுமான்ஜி உலகத்திற்கு சென்றுவிடுகிறார்.
ஸ்பென்சரை தேடி அவனது நண்பர்களும் ஜுமான்ஜி உலகத்திற்குள் போய்விடுகின்றனர். எதிர்பாராமல் ஸ்பென்சரின் தாத்தாவும் இந்த விளையாட்டில் சேர்ந்து விடுகிறார். இதையடுத்து ஜுமான்ஜி விளையாட்டை விளையாடும் அவர்கள், கடினமான சவால்களை எதிர்கொள்கிறார்கள். இறுதியில் இவர்கள் அனைவரும் சவால்களை சமாளித்து டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடித்து கேமைவிட்டு வெளியே வந்தார்களா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.(2017)இல் வெளிவந்த ஜுமான்ஜி வெல்கம் டூ தி ஜங்கிள் படம் நல்ல வரவேற்பைப் பெற்று தற்போது இந்த படத்தின் அடுத்த பாகமாக ‘ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல்’ வெளிவந்திருக்கிறது.
டிவைன் ஜான்சன் இந்த படத்தில் வயதானவரின் குரல் கூடிய பலசாளியாக நடித்து காமெடியிலும் கலக்கி இருக்கிறார். அவர் காட்டும் சீரியஸ் லுக் கூட சிரிப்பை வர வைக்கிறது.கெவின் ஹார்ட் காமெடியில் சிரிக்க வைக்கிறார். காரன் கில்லன், ஜேக் பிளாக், நிக் ஜோனஸ், பாபி கேனவல் என அனைவருமே அவர்களது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி படத்தை வேற லெவலுக்கு கொண்டுபோய்விட்டனர். கடந்த பாகத்தை ஒப்பிடுகையில் இதில் சாகச காட்சிகள் சற்று குறைவுதான். ஒவ்வொருவரும் உடல் விட்டு உடல் மாறும்போது நடக்கும் உரையாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது.மேலும் இப்படத்தின் தமிழ் டப்பிங், சாகச காட்சிகள், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள விதம், ஒளிப்பதிவு,இசை முதலியன படத்தை வேறலெவெலுக்கு கொண்டுபோய்விட்டது.படத்தை பற்றி மேலும் ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் படம்’ மரண மாஸ்’ இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க…