Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 01..!!

இன்றைய தினம் : 2019 சூன் 01

கிரிகோரியன் ஆண்டு : 152_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 153_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 213 நாட்கள் உள்ளன.

 

இன்றைய தின நிகழ்வுகள் :

1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார்.

1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார்.

1535 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர்.

1649 – பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1660 – மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார்.

1670 – இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கு இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது. மூன்றாம் ஆங்கில-இடச்சுப் போர் ஆரம்பமானது.

1779 – அமெரிக்கப் புரட்சிப் போரின் போது அமெரிக்க விடுதலைப் படையின் தளபதியாக இருந்த பெனடிக்ட் ஆர்னோல்டு மீது சட்டமுரணாக நடந்துகொண்டமைக்காக இராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

1792 – கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக இணைந்தது.

1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்களில் பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகளுக்கிடையே முதலாவது சமர் இடம்பெற்றது.

1796 – டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக இணைந்தது.

1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக்கேட்டுக்கொண்டார்.

1831 – யேம்சு கிளார்க் ரொஸ் முதலாவது ஐரோப்பியராக வட காந்தமுனையை அடைந்தார்.

1855 – அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.

1879 – கடைசி பொனபார்ட் மரபுரிமைக்குரிய நெப்போலியன் இயூஜின் ஆங்கிலோ-சூலு போரில் கொல்லப்பட்டார்.

1913 – கிரேக்க–செர்பிய உடன்பாடு எட்டப்பட்டது. இரண்டாவது பால்க்கன் போர் ஆரம்பமானது.

1929 – இலத்தீன் அமெரிக்காவின் பொதுவுடமைக் கட்சிகளின் 1-வது மாநாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்றது.

1941 – இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது. கிரீட் செருமனியின் கட்டுப்பாட்டில் வந்தது.

1941 – ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் பிஸ்கே விரிகுடாவில் செருமனியால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பிரித்தானிய நடிகர் லெசுலி அவார்டு உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1946 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் உருமேனியாவின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.

1947 – சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.

1959 – நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.

1962 – நாட்சி வதைமுகாம்களை உருவாக்கிய அடோல்வ் ஏச்மென் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.

1964 – கென்யா குடியரசானது.

1964 – சிறேதொகோ தேசிய வனம் சப்பானில் அமைக்கப்பட்டது.

1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1978 – டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

1979 – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.

1981 – தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

1988 – ஐரோப்பிய நடுவண் வங்கி பிரசெல்சு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1990 – பனிப்போர்: ஜார்ஜ் புஷ், மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் வேதி ஆயுதங்கள் தயாரிப்பை நிறுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

1993 – சாரயேவோவில் தொப்ரிஞ்சா ந்கரில் காற்பந்தாட்டப் போட்டி ஒன்றின் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர், 133 பேர் காயமடைந்தனர்.

1999 – அமெரிக்கன் எயர்லைன்சு 1420 விமானம் டாலசில் இருந்து லிட்டில் ராக் செல்கையில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

2001 – டெல் அவீவ் நகரில் இரவு விடுதி ஒன்றில் அமாசுப் போராளிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

2001 – நேபாள அரசுப் படுகொலைகள்: நேபாளத்தின் முடிக்குரிய இளவரசர் திபெந்திரா தனது தந்தை மன்னர் பிரேந்திரா, தாயார் ஐசுவர்யா உட்பட குடும்பத்தினர் ஏழு பேரை சுட்டுக் கொன்றார்.

2009 – இரியோ டி செனீரோவில் இருந்து பாரிசு சென்று கொண்டிருந்த ஏர் பிரான்சு ஏஎப் 447 விமானம் பிரேசில் கரைக்கப்பால் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 228 பேரும் உயிரிழந்தனர்.

2011 – 25 பறப்புகளை மேற்கொண்ட எண்டெவர் விண்ணோடம் தனது கடைசிப் பறப்பை முடித்து பூமியில் தரையிறங்கியது.

2015 – சீனாவின் ஊபேய் மாகாணத்தில் யாங்சி ஆற்றில் 458 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 400 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள் :

1675 – பிரான்செஸ்கோ சிப்பியோன் மாஃபி, இத்தாலியத் தொல்லியலாளர் (இ. 1755)

1796 – சாடி கார்னோ, பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1832)

1888 – ஏ. டி. பன்னீர் செல்வம், சென்னை மாகாண அரசியல்வாதி, அமைச்சர் (இ. 1940)

1892 – அமனுல்லாகான், ஆப்கானித்தான் அரசுத் தலைவர் (இ. 1960)

1926 – மர்லின் மன்றோ, அமெரிக்க நடிகை (இ. 1962)

1929 – நர்கிசு, இந்திய நடிகை (இ. 1981)

1937 – மார்கன் ஃபிரீமன், அமெரிக்க நடிகர்

1940 – கிப் தோர்ன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்

1942 – பாக்கோ பேன்யா, எசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர்

1970 – மாதவன், இந்திய நடிகர்

1982 – ஜஸ்டின் ஹெனின், பெல்ஜிய டென்னிசு வீரர்

1985 – தினேஷ் கார்த்திக், இந்தியத் துடுப்பாளர்

1996 – டாம் ஹாலண்ட், அமெரிக்க நடிகர்

இன்றைய தின இறப்புகள் : 

1660 – மேரி டயர், ஆங்கிலேய-அமெரிக்க தியாகி (பி. 1611)

1830 – சுவாமிநாராயண், இந்திய சமயத் தலைவர் (பி. 1781)

1846 – பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1765)

1868 – ஜேம்ஸ் புகேனன், அமெரிக்காவின் 15வது அரசுத்தலைவர் (பி. 1791)

1941 – ஹான்ஸ் பெர்கர், செருமானிய நரம்பியலாளர் (பி. 1873)

1952 – ஜான் டூயி, அமெரிக்க மெய்யியலாளர், உளவியலாளர் (பி. 1859)

1961 – மெல்வின் ஜோன்ஸ், பன்னாட்டு அரிமாசங்கங்களின் நிறுவனர் (பி. 1879)

1962 – அடோல்வ் ஏச்மென், செருமானிய நாட்சி இராணுவ அதிகாரி (பி. 1906)

1968 – ஹெலன் கெல்லர், அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1880)

1987 – கே. ஏ. அப்பாசு, இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், இதழியலாளர் (பி. 1914)

1996 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1913)

1999 – கிறிஸ்தோபர் கொக்கரல், காற்றுமெத்தை உந்தைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1910)

2001 – பிரேந்திரா, நேபாள மன்னர் (பி. 1945)

2001 – ஐசுவர்யா, நேபாள அரசி (பி. 1949)

இன்றைய தின சிறப்புநாள் :

பன்னாட்டு குழந்தைகள் நாள்

உலக பெற்றோர் தினம்

விடுதலை நாள் (சமோவா, நியூசிலாந்தில் இருந்து 1962)

மர நாள் (கம்போடியா)

உலக பால் தினம்

Categories

Tech |